Tuesday, March 10, 2020

விக்டோரியனில் இடம் மாற்றப்பட்ட எழுத்துகள்


பாமினி அல்லது டைப்ரைட்டர் முறையில் தட்டுகிறவர்கள் சில எழுத்துகள் இடம் மாற்றப்பட்டிருப்பதை உணருவார்கள். அவை ஏன் இடம் மாற்றப்பட்டுள்ளன என்பதை விளக்குவதற்கே இப்பதிவு வழங்கப்படுகிறது.


காற்புள்ளியில் (,) இருக்க வேண்டிய இந்த எழுத்து, விக்டோரியனில் ‘z’ என்ற இடத்துக்கு மாறியுள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. (1) காற்புள்ளி இருக்க வேண்டிய இடத்தில் இந்த ‘இ’ என்ற எழுத்தை வைத்தால், ஆங்கிலத்திலும் தமிழிலும் தட்டுகிறவர்களுக்கு தடுமாற்றம் ஏற்படும். ஆங்கிலத்தில் இருக்கும் போது காற்புள்ளியை அது இருக்கும் இடத்திலேயே தட்டும் நிலையில், தமிழில் தட்டும் போது, முற்றுப்புள்ளியை (.) தட்டினால்தான் காற்புள்ளி தோன்றும். இக்குழப்பத்தைத் தவிர்க்க, ‘இ’ என்ற எழுத்து இடம் மாற்றப்பட்டுள்ளது. (2) இந்த எழுத்து ஏன் ‘z’ என்ற இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது? என்ற கேள்வி அடுத்து எழுகிறது. பாமினி/டைப்ரைட்டர் முறையில், இந்த இடத்தில் ‘ண’ என்ற எழுத்து இடம் பெற்றிருக்கிறது. இந்த எழுத்து () அடிப்படை எழுத்து என்பதால், உயிரெழுத்து வரிசையோடு அதை அடுக்க முடியாது. எனவே, இந்த எழுத்து ‘q’ என்ற ஆங்கில எழுத்து இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ‘z’ என்ற ஆங்கில எழுத்து இப்போது காலியாக இருப்பதால், அந்த இடத்தில் ‘இ’ என்ற எழுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ண 

பாமினி/டைப்ரைட்டர் முறையில் தமிழ் அடிப்படை எழுத்துகளில் (Basic Letters) இந்த எழுத்து மட்டுமே நான்காவது வரிசையில் இடம் பெற்றிருக்கிறது. எனவே, இதனை 2வது வரிசையின் முதல் விசையில் ‘q’ என்ற எழுத்தின் விசைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ‘q’ எழுத்தில் ‘ணு’ என்ற எழுத்து வைக்கப்பட்டுள்ளது விசை அடுக்கு முறையில் விநோதமாகக் காணப்படுகிறது என்பதால் விக்டோரியனில் அது அகற்றப்பட்டுள்ளது.

இந்த எழுத்து பாமினி/டைப்ரைட்டர் முறையில் ‘H’ என்ற ஆங்கில எழுத்தின் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. விக்டோரியனில் அனைத்து தமிழ் அடிப்படை எழுத்துகளும் கீழ் தட்டில் (Lower Case) வைக்கப்பட வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட்டுள்ளது. எனவே, முன்பு ‘H’ என்ற ஆங்கில எழுத்தில் இருந்த இந்த எழுத்து  இப்போது ‘o’ என்ற ஆங்கில எழுத்து இருக்கும் இடத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த எழுத்து முன்பு (’) (ஒற்றை மேற்கோள் குறி) இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், உ-கர எழுத்துகளை உருவாக்கும் இணைப்பு எழுத்து இங்கே கொண்டு வரப்பட வேண்டியிருப்பதால், இந்த ‘ங’ என்ற எழுத்து அதற்கு மேலே உள்ள ‘[’ என்ற எழுத்தின் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாமினி/டைப்ரைட்டர் இடத்தில் (’) என்ற எழுத்தைத் தட்டினால் ‘பு’, ‘ஙு’, ‘யு’, ‘வு’ ஆகிய எழுத்துகளுக்கான உருபு இடம் பெற்றிருந்தது, ஆனால், விக்டோரியனில் இதற்கான தேவை ஏற்படவில்லை என்பதால், அந்த உருபு அங்கே வைக்கப்படவில்லை.

 

இந்த எழுத்து பாமினியில்/டைப்ரைட்டரில் இரட்டை மேற்கோள் குறி (“) இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், விக்டோரியனில் தமிழ் அடிப்படை எழுத்துகளை மேல் தட்டில் (Shift Position) வைக்கக் கூடாது என்ற விதி பின்பற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த எழுத்து தற்போது ‘]’ என்ற ஆங்கில எழுத்து இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ் சொற்களில் இதன் பயன்பாடு மிகக் குறைவாக இருப்பதால், குவியெழுத்துகள் (Focul Letters) இருக்கும் இடத்துக்கு மிகவும் தொலைவில் வைக்கப்பட்டிருக்கிறது.

‘டி’, ‘டீ’ எழுத்துகள்

விக்டோரியன் முறையில் இந்த எழுத்துகளுக்கான இடம் ஒதுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ‘டி’ என்ற எழுத்து உருவாக்க, ‘ட’ மற்றும் ‘ி’எழுத்துகளைத் தட்டினால் (அல்லது ஆங்கிலத்தில் ‘lp’ தட்டினால்) உருவாகும். அதே போல், ‘டீ’ என்ற எழுத்தை உருவாக்க, ‘ட’ மற்றும் ‘’ எழுத்துகளைத் தட்டினால் (அல்லது ஆங்கிலத்தில் ‘lP’ தட்டினால்) உருவாகும். இதன் அடிப்படையில், ‘டி’ மற்றும் ‘டீ’ ஆகிய எழுத்துகளுக்கு ‘o’ மற்றும் ‘O’ ஆகிய ஆங்கில எழுத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. மாறாக இந்த இடத்தில் ‘ழ’ என்ற எழுத்தும், ‘’ என்ற சொற்சுருக்கமும் ஒதுக்கப்பட்டுள்ளன.  

வடமொழி எழுத்துகள்

பாமினி/டைப்ரைட்டர் முறையில் அடுக்கப்பற்றிருந்த இந்த ஏழு வட மொழி எழுத்துகளும் (, ,,          ,, க்ஷ, ஸ்ரீ) முற்றிலும் இட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.  எண் வரிசையின் (1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, -. =) மேல் தட்டில் உள்ள எழுத்துகள் (!. @. #. $. %. ^. &. *. (. ). _. +) தமிழ் தட்டச்சுகளுக்கும் அவசியம் என்பதால், அந்த எழுத்துகள் இரண்டு மொழிகளுக்கும் இருக்கும் இடத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப்படுவதால் இந்த ஏழு வடமொழி எழுத்துகளும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், விக்டோரியனில் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் நோக்கில், அவை இரண்டாவது விசையடுக்கின் வலப்பக்கத் தொங்கலிலும் (ஷ, க்ஷ,  ஆகிய எழுத்துகள்), ‘ஸ’ மற்றும் ‘’ ஆகிய ஆங்கில எழுத்துகளின் மேல் தட்டிலும் (B, N), ‘ஸ்ரீ’ என்ற விநோத வட மொழி எழுத்து ‘~’ என்ற குறி இருக்கும் இடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளன.

உ-கர, ஊ-கார எழுத்துகள்

பாமினி/டைப்ரைட்டர் முறையில் ஒதுக்கப்பட்டுள்ள மேல் தட்டு (Q, W, E, R, T, Y, U, I, O, P, {, },|, A, S, D, F, G, H, J, K, L, :, “) இடங்கள் விக்டோரியனில் இவ்வெழுத்துகள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பாமினி/டைப்ரைட்டர் முறையில் இவை இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் உள்ள மேல் தட்டில் (Shift Positions) அடுக்கப்பட்டிருந்தன. பண்டைய முறையில் ஒரு சில ஊ-கார எழுத்துகள் என் வரிசையின் மேல் தட்டிலும் காணப்படுகின்றன. ஆனால், விக்டோரியன் முறையில் உ-கர எழுத்துகளுக்கு (ளு, னு, கு, ழு, து, மு, டு, ணு, று, நு, சு, கூ, லு, ரு), (’) என்ற விசையும், ஊ-கார எழுத்துகளுக்கு (”) என்ற எழுத்தும் ஒதுக்கப்பட்டுள்ளதால் பண்டைய முறையில் ஒதுக்கப்பட்ட மேல் தட்டு (Shift Keys) இடங்கள் விக்டோரியனில் தவிர்க்கப்படுகின்றன.

தமிழ் எண்கள் / தமிழ் சுருக்கெழுத்துகள்

பாமினி/டைப்ரைட்டர் முறையில் இந்த எழுத்துகளுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் விக்டோரியன் முறையில் தமிழ் எண்களுக்கு (, , , , , , ,, , , , , ) மூன்றாவது வரிசையின் மேல் தட்டும் (3rd Row Shift), குறுக்கெழுத்துகளுக்கு (. , , , , , , , , ) இரண்டாவது வரிசையின் மேல் தட்டும் (2nd Row Shiftt) ஒதுக்கப்பட்டுள்ளன.

இதர குறிப்புகள்

பாமினி முறையில் தட்டுகிறவர்கள் எ-கர எழுத்துகளை உருவாக்குவதற்கு ‘b’ என்ற ஆங்கில எழுத்துகளையும், ஏ-கார எழுத்துகளைத் தட்டுவதற்கு ‘n’ என்ற ஆங்கில எழுத்துகளையும் முதலில் தட்டும் நிலை ஏற்படும் நிலையில், விக்டோரியன் முறைக்கு மாறும் போது, பயநர்கள் சிறமத்தை எதிர்நோக்கலாம். ஆனால், குறிப்பாகா ஏ-கார எழுத்துகளுக்கு ‘’ என்ற இணைப்பு அடிக்கடி தட்டப்படும் எழுத்து என்பதால், இதை மேல் தட்டில் (Shift Position) வைப்பது தர்க்க ரீதியாக தவறான வாதமாகும். எனவே, டைப்ரைட்டர் முறையில் ‘’, ‘’ ஆகிய குறிகள் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment